வயது அதிகரிக்க அதிகரிக்க மக்களின் நடவடிக்கைகளில் நீங்கள் மாற்றங்களை காணலாம். குறிப்பாக இது 60 வயதை கடந்தவர்களுக்கு பொதுவான ஒன்று. ஏன் இவ்வாறு நடக்கிறது என்று ஆச்சர்யமாக இருக்கலாம். நோய்குறித்தோன்றா வயோதிகத்துடனான மூலக்கூறுகளின் அளவு மரபணு நிலையின்மைக்கு வழிவகுப்பது இதற்கு காரணமாகும். இது மூளையின் உருவம் மற்றும் இயக்கத்தில் பாதிப்பை ஏற்படுத்தலாம். வீக்கம், நரம்பியல் இழப்பு, நரம்பியக்கடத்திகளின் அளவு குறைவது உள்ளிட்டவை இதில் அடங்கும். கூடுதலாக, டிஎன்ஏ சரிசெய்துகொள்ளும் நுட்பம் குறைவது, பி 12 மற்றும் போலிக் அமிலக்குறைவால் ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவை மூளையில் சேதம் மற்றும் மத்திய நரம்பு மண்டலத்தில் வயதானவர்களுக்கு நோய் தொற்றை ஏற்படுத்தும். ஒருவருக்கு ஏற்பட வாய்ப்புள்ள மற்ற கோளாறுகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.
பக்கவாதம் : இது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய நிலையாகும். மூளைக்குச்செல்லும் ரத்தத்தின் அளவு, ரத்தக்குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு மூளைக்குச் செல்லும் ரத்தம் திடீரென நிறுத்தப்படுவதால் ஏற்படுவதாகும். எச்சரிக்கை அறிகுறிகள் தோன்றும்போது, உடனடியாக செயல்பட வேண்டிய அவசியம் உள்ளது. முகத்தில் தொய்வு ஏற்படுவது, பேசுவதில் சிரமம், மயக்கம் போன்றவை அறிகுறிகளாகும். இஸ்கிமிக் மற்றும் ரத்தக்கசிவு பக்கவாதங்கள் இரண்டு முக்கியமான பக்கவாத வகைகளாகும்.
அல்சைமரஸ் நோய் : இந்த நோய் ஏற்படுவதற்கான சரியான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இது மனித முளையின் செல்களை சேதப்படுத்தி, மனித உடல் நடவடிக்கைகள் மற்றும் மனதளவில் கோளாறுகளை ஏற்படுத்துகிறது. இது ஒரு வளர்ந்துவரும் கோளாறாகும்.
பார்க்கின்சன்ஸ் நோய் : மூளைக்குச்செல்லும் முக்கிய நரம்பு இறந்துவிடுவதால், இயக்கத்தில் கோளாறு ஏற்படுகிறது. இது ஒரு வளர்ந்துவரும் நோயாகும். இதற்கு முறையான மருந்துகள் தேவைப்படுகிறது. சில நேரங்களில் நடுக்கம் மற்றும் விறைப்பு போன்றவை ஏற்படும்போது, அறுவைசிகிச்சை தேவைப்படுகிறது.
கை-கால் வலிப்பு (காக்கா வலிப்பு) : இது ஒரு பொதுவான நரம்பியல் கோளாறு ஆகும். மூளைசெல்களில் ஏற்படும் மாற்றங்களால், உடல் மற்றம் மன பிரச்னைகள் ஏற்படுவது இதன் அறிகுறியாகும். வயதானவர்களுக்கு வலிப்பு ஏற்படுவதற்கு செரிப்ரோவாஸ்குலர் நோயே பொதுவான காரணமாகும். நரம்பு சிதைவு கோளாறுகள், பெருமூளை கட்டிகள் மற்றும் தலையில் ஏற்பட்ட காயங்கள் இந்நோய் ஏற்பட காரணமாகும்.
டிமென்சியா: 10 சதவீத வயோதிகர்கள் இந்த நோயால் பாதிக்கப்படுகிறார்கள். இந்நோய் வயோதிகத்துடன் தொடர்புடையது. இது ஒரு வளர்ந்து வரும் நோயகும். நாளாக நாளாக அடுத்தவர்களை சார்ந்து வாழ வேண்டிய நிலையை ஏற்படுத்தும். அல்சைமர்ஸ் நோய் மற்றும் வாஸ்குலர் டிமென்சியா ஆகியவை இதன் இரண்டு முக்கிய வகைகளாகும்.
இது வழக்கமாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்படுவதால், இந்த இரண்டு வகைகளுக்கும் வித்யாசம் கண்டுபிடிப்பது மிகவும் சிரமமாகிறது. இதுபோல் யாருக்காவது ஏற்பட்டாலோ அல்லது உங்களுக்கே இதுபோன்ற பிரச்னைகள் ஏற்பட்டாலோ உடனே மருத்துவரை அணுக வேண்டும் என்பது எங்களின் அறிவுரையாகும். நீங்கள் ஆலோசனை மற்றும் நரம்பியல் பரிசோதனைகள் செய்துகொள்ள வேண்டிவரும். இவற்றிற்கு சிறப்பான சிகிச்சைகள் உள்ளன.
ரத்தப்பரிசோதனை மற்றும் மூளையை படம் பிடிப்பது போன்ற computer-assisted tomography (CAT) and magnetic resonance imaging (MRI) பரிசோதனைகள் நோயாளிகளுக்கு சில நரம்பியல் அறிகுறிகள் தோன்றுவதற்காக காரணங்களை கண்டறிய உதவும்.
முக்கியமான அறிகுறிகள்
- ஆளுமையில் மாற்றம்
- திடீர் பலவீனம் மற்றும் உடலில் உணர்வின்மை
- வேலைகளை செய்வதில் சிக்கல்
- நினைவிழப்பு
- அடிக்கடி பொருட்களை மாற்றி வைப்பது
நரம்பியல் கோளாறுகளை தடுப்பது எப்படி?
புகைபிடிப்பது, உடற்பயிற்சி செய்யாதது, உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம் மற்றும் உயர் கொழுப்பு ஆகியவை நரம்பியல் கோளாறுகளை ஏற்படுத்தும் ஆபத்து உள்ளவை. எனவே இவற்றை கட்டுப்படுத்துவது மிக முக்கியமாகும். ஒருமுறை உங்களுக்கு நரம்பியல் கோளாறுகள் ஏற்பட்டுவிட்டது என்று தெரிந்தால், இவற்றை கட்டுப்படுத்த முயற்சி செய்வது மிகமிக அவசியமாகும். புத்தகம் படிப்பது, குறுக்கெழுத்துப்போட்டிகள் விளையாடுவது, ஆரோக்கியமான உரையாடல் மற்றும் தினசரி உடற்பயிற்சி ஆகியவற்றை செய்வது உங்கள் உடல் ஆரோக்கியம் மேம்படவும், இதுபோன்ற பிரச்னைகளிலிருந்து தப்பிக்கவும் உதவும்.
மருத்துவரை எப்போது சந்திக்க வேண்டும்
உங்கள் சிந்தனை முறையில் மாற்றம், நினைவாற்றல் மற்றும் அன்றாடப்பணிகளை செய்வதில் சிக்கல் ஏதேனும் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரிடம் செல்ல வேண்டியது அவசியம். இந்த பிரச்னைகள் உங்கள் வாழ்க்கை முறையில் பாதிப்பை ஏற்படுத்தினால் உடனடி மருத்துவ கவனம் தேவை.
நரம்பியல் கோளாறுகள் எண்ணிலடங்காதவை. அவை பல்வேறு காரணங்களால் ஏற்படும். பல்வேறு சிக்கல்கள், விளைவுகளையும் ஏற்படுத்தும். அதில் பெரும்பாலானவை வாழ்நாள் முழுவதும் கவனிக்கவேண்டியவையாகும்.
டாக்டர் வாஞ்சிலிங்கம் மருத்துவமனை, தஞ்சாவூரில் உள்ள ஒரு சிறந்த மருத்துவமனையாகும். டாக்டர் வாஞ்சிலிங்கம் உயர்தர சிகிச்சையை, கட்டுப்படியாகக் கூடிய செலவில் செய்கிறார். நரம்பியல் கோளாறு உள்ள ஒவ்வொரு நோயாளியின் மீதும் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது.
டாக்டர் எஸ். வாஞ்சிலிங்கம் அவர்களால் சரிபார்க்கப்பட்ட பதிவு
எங்கள் இணைய முகவரி : info.vanchilingamhospital@gmail.com
முன்பதிவிற்கு: drvanchilingamhospital.com/book-an-appointment
என்ற இணைய முகவரியை தொடர்புகொள்ளவும்.
Blog Reviewed by: Dr. S. Vanchilingam
Mail Us: info.vanchilingamhospital@gmail.com
Book an appointment: drvanchilingamhospital.com/book-an-appointment