Thursday, 20 February 2020

பக்கவாத சிகிச்சையில் திரோம்போலிசிஸ் தெரபி

உலகம் முழுவதிலும், ஒவ்வொரு ஆண்டும் 15 மில்லியன் பேர் பக்கவாதத்தால் பாதிக்கப்படுகின்றனர் என்று உலக சுகாதார நிறுவனத்தின் சமீபத்திய அறிக்கை கூறுகிறது. அதில் 6.2 மில்லியன் பேர் இறந்துவிடுகிறார்கள். 5 மில்லியன் பேர் நிரந்தரமாக முடங்கிவிடுகின்றனர். உங்களுக்கு பக்கவாதம் ஏற்படும்போது, ஒவ்வொரு நிமிடமும், உங்கள் மூளை 1.9 மில்லியின் செல்களை இழக்கிறது. பக்கவாதத்திற்கு சிகிச்சையளிக்கப்படாத ஒவ்வொரு மணி நேரமும் உங்கள் வாழ்நாளில் மூன்றரை ஆண்டுகளை இழக்கிறீர்கள். பக்கவாதம் ஏற்பட்டு அதிக நேரம் சிகிச்சை கிடைக்கப்பெறாத ஒருவருக்கு மறதி நோய், பேசுவதில் சிக்கல் அல்லது நடவடிக்கைகளில் மாற்றம் ஆகியவை ஏற்படுகிறது. 

 Stroke

தொற்றுநோய் நிலையை பக்கவாதம் ஏற்கனவே அடைந்துவிட்டது. சரியான சிகிச்சை கிடைக்காமல், 2020ல் ஒரு ஆண்டின் மரணங்கள் 8 மில்லியனை தொட்டுவிட்டது.  ஒவ்வொரு 6 வினாடியிலும் பக்கவாதத்தால் ஒருவர் மரணிக்கிறார். 60 வயதுக்கு மேல் ஒருவர் மரணிப்பதற்கு பக்கவாதம் இரண்டாவது காரணமாக இருக்கிறது. குழந்தைகளையும் இது பாதிக்கிறது. எய்ட்ஸ், மலேரியா மற்றும் டிபியைப்போல் பக்கவாதமும் ஓர் ஆண்டின் அதிக மரணங்களுக்கு காரணமாக இருக்கிறது. உலகம் முழுவதிலும் மூன்றில் ஒரு பங்கு மாற்றுத்திறனாளிகள் உருவாவதற்கு பக்கவாதம் காரணமாகிறது. 75 சதவீத பக்கவாத பாதிப்புகள் தடுக்கக்கூடியவையாகும். தற்போது பக்கவாத சிகிச்சையில் அதிக வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. அது மேலும் எளிதாக நோயை குணப்படுத்திவிடுகிறது. ஆரம்பத்திலேயே பக்கவாதத்தை கண்டறிந்து உரிய சிகிச்சை வழங்குவதன் மூலம், நோயை முழுமையாக குணப்படுத்த முடியும். 

பக்கவாதம் என்றால் என்ன? 
மூளைக்குச் செல்லும் ரத்தத்தின் அளவு குறைவதாலோ அல்லது தடைபடுவதாலோ பக்கவாதம் ஏற்படுகிறது. அது ஏற்படும்போது, மூளைக்கு போதிய அளவு ஆக்ஸிஜன் அல்லது சத்துக்கள் கிடைக்காது. மூளை செல்கள் குறிப்பிட்ட சில நொடிகளில் இறந்துவிடுகிறது. இஸ்கிமிக் பக்கவாதம் மற்றும் ரத்தக்கசிவு பக்கவாதம் ஆகியவை முக்கியமான பக்கவாதங்கள் ஆகும். 87 சதவீதம் இஸ்கிமிக் வகை பக்கவாதம் ஆகும். இரண்டிற்கும் வெவ்வேறு வகையான காரணங்கள் உள்ளன. எனவே அவற்றிற்கு தனித்தனியான சிகிச்சை முறைகள் தேவை. 

 இஸ்கிமிக் பக்கவாதம்
தமனிகள் குறுகுவது அல்லது தடைபடுவதால் இஸ்கிமிக் பக்கவாதம் ஏற்படுகிறது. சிகிச்சை முறையும் அந்த தமனியை பழைய நிலைக்கு வரவழைப்பதற்கான செயல்களில் கவனம் செலுத்தி, மூளைக்கு தேவையான ரத்த ஓட்டத்தை சீர்செய்யும். இந்த பக்கவாதம், மாரடைப்பைப்போன்றது. ரத்த நாளங்களில் கொழுப்பு படிவதால், தமனிகளில் தடிப்பு ஏற்பட்டு, அடிக்கடி ரத்தம் உறைதல் ஏற்படும். கொழுப்பு படிவதில் ஒரு பகுதி, மூளைக்கு செல்லும் ரத்தத்தை தடைசெய்யும். 

ரத்தக்கசிவு (hemorrhagic) பக்கவாதம்
பலவீனமான ரத்த நாளங்கள் உடைவது அல்லது முறிவதால் ரத்தக்கசிவு பக்கவாதம் ஏற்படும். அப்போது கசியும் ரத்தம், சுற்றியுள்ள மூளை திசுக்களைச்சுற்றி அழுத்தம் கொடுக்கும். சிகிச்சை ரத்தக்கசிவை கட்டுப்படுத்துவதிலும், மூளையின் அழுத்தத்தை குறைப்பதிலும் கவனம் செலுத்தும். 

 Stroke

பக்கவாதத்திற்கான சிகிச்சைகள்:
ஒருவர் எந்த வகை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை பொறுத்து, சிகிச்சை இருக்கும். எந்த சூழ்நிலையிலும், பாதிக்கப்பட்ட நபரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச்செல்வது அவசியம். அப்போதுதான் சிகிச்சைகள் பலனளிக்கும். இஸ்கிமிக் பக்கவாத சிகிச்சை அவசர சிகிச்சை மற்றும் தடுப்பு சிகிச்சை என்று இரண்டு வகைப்படும். அவசர சிகிச்சையில் ரத்த அடைப்பை சீராக்குவதற்கும், தடுப்பு சிகிச்சையில் மீண்டும் பக்கவாதம் வராமல் தடுப்பதற்கும் சிகிச்சையளிக்கப்படும். ரத்தக்கசிவு பக்கவாதத்தில் ரத்தக்கசிவை தடுப்பதற்கு சிகிச்சையளிக்கப்படும். 

திரோம்போலிடிக் தெரபி 
ரத்த நாளங்களில் உள்ள ஆபத்தான ரத்த உறைதலை கலைத்துவிடுவதற்கு திரோம்போலிசிஸ் சிகிச்சை பயன்படுகிறது. பக்கவாத நோயாளிகளுக்கு உறைந்த ரத்தக்கட்டிகளை வெடிக்க வைப்பதற்கான மருந்துகள் மூலம் சிகிச்சையளிக்கப்படுகிறது. அவை அந்த கட்டிகளை உடைத்து மூளைக்கு ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. திசுக்கள் மற்றும் உறுப்புகள் சேதமாவதையும் தடுக்கிறது. திரோம்போலிடிக் மருந்துகளின் திறன்கள் இரண்டு காரணிகளை பொறுத்தது. 

உறைந்த ரத்தத்தின் வயது திரோம்போலிக்கின் திறனை குறைக்கும் வாய்ப்பு உண்டு. நாள்பட்ட உறைந்த ரத்தத்தில் அதிகளவில் பைபிரின் குறுக்காக இணைந்திருக்கும். இவை திரோம்போலிடிக்சை எதிர்க்கும் ஆற்றல் பெற்றிருக்கும். பைபிரினின் செயல்பாடுகளை அதில் சிறப்பாக இடம்பெற்றுள்ள லைடிக்தான் முடிவுசெய்கிறது. உடலுக்கு எதிராக மற்ற ஆற்றல்களும் அவ்வப்போது பைபிரினின் செயல்பாடுகளை முடிவுசெய்கிறது.  
திரோம்போலிசிஸ் இரண்டு வகைப்படும் 

  • பைபிரின் குறிபிட்ட திரோம்போலிடிக்ஸ் 
  • நான் பைபிரின் குறிபிட்ட திரோம்போலிடிக்ஸ்  

அல்டிபிளாசே, டெனெக்டேபிளாசே, ரெட்டேபிளாசே, ஆகியவை பைபிரின் குறிபிட்ட திராம்பாலிடிக்ஸ் மருந்துகள். ஸ்டாபைலோகினேசே அல்லது ஸ்ரெப்டோகினாசே ஆகியவை நான்பைபிரின் மருந்துவகைகள் ஆகும். மாற்றாக, பிளாஸ்மினோஜெனை பிளாஸ்மினாக மாற்றக்கூடிய லைட்டிக்சும் வழங்கப்படுகிறது. 

பக்கவாதத்திற்கான அறிகுறிகள் தெரிய துவங்கியவுடனே மருத்துவமனைக்கு அழைத்துச்செல்வது மிக முக்கியமாகும். எவ்வளவு சீக்கிரம் சிகிச்சையளிக்கப்படுகிறதோ, அது ஆபத்தை குறைக்கிறது. மேலும், விரைவில் குணமடைய வழிவகுக்கிறது. 

பக்கவாதத்தில் அவசர மேலாண்மை 

ஐவி திரோம்போலிசிஸ்
தேசிய நரம்பியல் நோய்கள் மற்றும் பக்கவாத ஆய்வு மையத்தின் ஆராய்ச்சி அறிக்கையின்படி, இஸ்கிமிக் பக்கவாதத்திற்கான ஐவி திரோம்போலிசிஸ் சிகிச்சை 1990ம் ஆண்டுக்கு பின்னரே துவங்கியது. உறைந்த ரத்த கட்டிகளை வெடிக்க செய்யக்கூடிய திரோம்போலிசிஸ் மருந்துகள் புற நரம்புகளில் ஐவி மூலம் கைகளில் உள்ள வெளியில் தெரியக்கூடிய நரம்புகள் வழியாக செலுத்தப்படும். அதிகளவில் உறைந்த ரத்த கட்டிகளை வெடிக்க வைக்க திசு ப்ளாஸ்மினோஜென் ஆக்டிவேட்டர் (டிபிஏ) என்ற மருந்து பயன்படுத்தப்படுகிறது. பக்கவாதம் ஏற்பட்டவுடன் உடனடியாக இந்த மருந்தை செலுத்துவதன் மூலம் அதிக பலனை பெறமுடியும். 

ஐஏ திரோம்போலிசிஸ்(IAT)
ஐஏ திரோம்போலிசிஸ் முறை டிபிஏயுடன் கூடுதலாக கொடுப்படும். அல்லது டிபிஏ ஏற்றுக்கொள்ளாத நோயாளிகளுக்கு வழங்கப்படுகிறது. பக்கவாதம் ஏற்பட்ட குறிப்பிட்ட நேரத்தை கடந்தாலோ அல்லது குறிப்பிட்ட சர்வதேச வழக்கமான நேரத்திற்கு எதிராக மருந்து உபயோகத்திற்கு எதிரான அறிகுறிகள் இருந்தாலோ இந்த சிகிச்சை வழங்கப்படும். ரத்தம் உறைந்துள்ள இடத்தில் சிறிய குழாய் மூலம் டிபிஏ மருந்து வழங்கப்படும். மருந்து உங்கள் உடல் முழுவதும் பரவாது. நடு பெருமூளை அல்லது கரோடிட் தமனி மற்றும் பேசிலரில் பிரச்னை உள்ளவர்களுக்கு உதவக்கூடியது ஐஏடி சிகிச்சை. 

மெக்கானிக்கல் திரோம்போலிசிஸ் 
தமனிகளில் ரத்தம் பெரியளவில் உறைந்திருப்பதை டிபிஏவால் வேகமாக செயல்பட்டு கரைக்க முடியாது. மெக்கானிக்கல் சிகிச்சையில் குழாய்களை நேரடியாக திரோம்போயம்போலஸ் மூலமாக உறைந்த ரத்தகட்டிகள் மீது  ரத்த உறைவை ஊடருக்கும் அல்லது மீட்கும் கருவியை செலுத்துவது மெக்கானிக்கல் திரோம்போலிசிஸ் என்றழைக்கப்படுகிறது. தற்போது வடிவமைக்கப்பட்டுள்ள கருவிகள் ரத்த உறைவை அப்படியே இழுத்து எடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. 

அவை சில நிமிடங்களில் உறைந்த ரத்தக்கட்டிகளை நீக்கிவிடும். பார்மாசூட்டிக்கல் திரோம்போலிடிக்ஸ் சிகிச்சைகள் 2 மணி நேரத்திற்கு மேல் எடுத்துக்கொள்ளும். இந்த கட்டிகளை ஊடறுப்பதற்கு முதலில் வயர் கொண்ட மெக்கானிகல் திரோம்பேக்டமி பயன்படுத்தப்பட்டது. வாகுயூம் கிளினரைபோல் ரத்தம் உறைந்துள்ள இடத்தில் வைக்கப்பட்டு, அப்படியே எடுத்துவிடும் அளவிற்கு நவீன இயந்திரங்கள் தற்போது பயன்படுத்தப்படுகின்றன. தற்போது பயன்படுத்தப்படும் கருவிகள் ஸ்டென்ட் ரிட்ரைவர்ஸ் அல்லது ஸ்டென்ட்ரிவையர்ஸ் என்று அழைக்கப்படுகிறது. அவை பக்கவாதத்திற்கு சிறப்பான சிகிச்சையளிப்பதில் மிகவும் உதவுகிறது. 

யாருக்கு திரோம்போலிசிஸ் சிகிச்சை வழங்கப்படும்? 
குறிப்பிட்ட ஆரோக்கிய குறைபாடு மற்றம் ஆபத்தான நிலையில் உள்ளவர்களுக்கு திரோம்போலிடிக் சிகிச்சைகள் வழங்கப்படும். இந்த சிகிச்சையை எடுத்துக்கொள்ளும் அளவிற்கு நோயாளியின் உடல்நிலை உள்ளதா என்பது குறித்து ஆராய்ந்து சிகிச்சையை துவங்க வேண்டும். 

  • அண்மையில் தலையில் அடிபட்டவர்கள் 
  • நோய்க்கான அறிகுறிகள் எப்போது துவங்கியது என்று கூறமுடியாதவர்கள் அல்லது கூற இயலாதவர்கள் 
  • ரத்தப்போக்கு பிரச்னை மற்றும் புண் ஏற்பட்டால், ரத்தம் உறையாமை 
  • அண்மையில் அறுவை சிசிச்சை செய்தவர்கள் 
  • கவுமாடின் போன்ற ரத்தத்திற்கான மாத்திரைகளை உபயோகிப்பவர்கள் 
  • கட்டுப்படுத்த முடியாத உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் ஆகியவர்களுக்கு இந்த சிகிச்சை அளிக்கப்படமாட்டாது. 

டாக்டர் வாஞ்சிலிங்கம் மருத்துவமனையில் அனுபவமுள்ள, அர்ப்பணிப்புடன் பணியாற்றும் சிறந்த மருத்துவர்கள் கொண்ட நரம்பியல் சிகிச்சை மையங்களிலேயே ஒரு புகழ்பெற்ற மருத்துவமனையாக உள்ளது. மருத்துவமனையை துவங்கிய டாக்டர் வாஞ்சிலிங்கம் தலைமையில் சிறந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் அடங்கிய குழுவினர் எந்த நேரமும் சிறப்பான சிகிச்சையளிக்க தயார் நிலையில் உள்ளனர். வாஞ்சிலிங்கம் மருத்துவமனை மாவட்டத்தின் முதல் மற்றும் ஒரே ஒரு நரம்பியல் சிறப்பு சிகிச்சைக்கு ஐசியு உள்ள மருத்துவமனையாகவும், எம்ஆர்ஐ ஸ்கேன் வசதி, கேத் லேப் வசதி உள்ள சிறந்த மருத்துவமனையாக திகழ்கிறது. டாக்டர். வாஞ்சிலிங்கம் மருத்துவமனையில் வழங்கப்படும் பக்கவாதம் தொடர்பான சிகிச்சைகள் அனைத்தும் தமிழ்நாட்டிலேயே சிறப்பான சிகிச்சைகள் ஆகும். இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் இருந்து வரும் நோயாளிகளுக்கு 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பான சிகிச்சையளிக்கப்படுகிறது. தஞ்சாவூரிலேயே நரம்பியல் சிகிச்சைக்கு புகழ்பெற்ற மருத்துவமனையாகவும், பக்கவாத சிகிச்சையில் சிறந்த மருத்துவமனையாகவும் திகழ்கிறது. இம்மருத்துவமனை இந்தியாவிலேயே திரோம்போலிடிக்ஸ் சிகிச்சைக்கு பிரபலமான மருத்துவமனையாகும். 

டாக்டர் சோமேஷ் வாஞ்சிலிங்கம், டாக்டர் வாஞ்சிலிங்கம் மருத்துவமனையில் பக்கவாத மைய இயக்குனராவார். சுற்றுவட்டாரத்தில் உள்ள மாவட்டங்களில் இவர் ஒருவரே இன்டர்வென்ஷனல் நரம்பியல் நிபுணர் ஆவார். தமிழகத்திலே இன்டர்வென்ஷனல் சிகிச்சை செய்யக்கூடிய பயிற்சிபெற்ற ஒரே மருத்துவர் டாக்டர் சோமேஷ் ஆவார்.

Blog Reviewed by: Dr. S. Vanchilingam
Mail Us: info.vanchilingamhospital@gmail.com